நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் நிலவும் பற்பல பிரச்னைகள், ஊழல்கள் என... பல விஷயங்களை அடிக்கி முன்வைக்க அதுவே தமிழக அரசியலில் பரபரப்பாக போய் கொண்டிருக்கிறது. தமிழக அமைச்சர்கள் ஒவ்வொருவராக கமலுக்கு எதிராக கருத்து சொல்லி ஆவேசமாக பேசி வருகின்றனர். கமலும் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்.
கமல்ஹாசனின் உடன் சகோதரரான சாருஹாசனும், கமலுக்கு ஆதரவாக நேற்று குரல் கொடுத்தார். "ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட ஜெயலலிதா பேரில் ஆட்சி செய்கிறீர்கள், சிறைக்கு சென்றுள்ள கைதி சசிகலாவின் சொல்படி ஆட்சி செய்கிறீர்கள்... என்று தன் பங்கிற்கு பேஸ்புக்கில் தன் கருத்துக்களை அமைச்சர்களை விளாசினார்.
இந்நிலையில் கமல் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் சாருஹாசன் கூறியிருக்கிறார். அவர் தனது பேஸ்புக்கில், "கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது நாட்டுக்கு மிக்க நல்லது தான். ஆனால் அவர் வந்து யாரையும் திருத்த முடியாது. தமிழ்மக்கள், பெரியாரின் கொள்கையையும் நேர்மையை ஒப்புக் கொள்ளாதவர்கள்" என்று கூறியுள்ளார்.