பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன் வெளியில் வேற ஃபைவ் ஸ்டார் ஜெயிலெல்லாம் இருக்கு என ஒரே போடாக போட்டுத் தாக்கினார். விஜய் டிவி ஒளிப்பரப்பி வரும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஒரு போட்டியாளர் வாக்கின் நிமித்தம் வெளியேற்றப்பட்டு வருகிறார்.


Image result for kamal and namitha



அதன்படி இந்த வாரம் நடிகை நமீதா பிக் பாஸை விட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து நடிகர் கமல்ஹாசனை சந்தித்த அவர் நிகழ்ச்சி தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டார். மேலும் தன்னுடன் இருந்த சக போட்டியாளர்கள் குறித்தும் கருத்து கூறிய நமீதா, ஓவியா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.


Image result for kamal and namitha

 

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீடு எப்படி இருந்தது என நடிகர் கமல்ஹாசன் கேட்டார் அதற்கு பதிலளித்த நமீதா, பிக்பாஸ் வீடு ஒரு சூப்பர்  ஃவைவ் ஸ்டார் ஜெயில் என்றார். அதற்கு பதிலளித்த கமல் இது அது இல்லை.. ஆனால் வெளியில் வேற விதமான ஃபைவ் ஸ்டார் ஜெயில்லாம் இருக்கு என்றார்.

 




Find out more: