நடிகர் கமல் ஹாசனை திட்டுவது என்பது நல்ல தமிழக அரசுக்கு நல்லதல்ல என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் சார்பில் ஒரு கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஊழல் குறித்து தனது கருத்துக்களை உரக்க பேச நடிகர் கமல் ஹாசனுக்கு உரிமை உள்ளது.
கமலை மிரட்டுவது, அவரை பணிய வைப்பது என்பது தமிழக அரசுக்கு நல்லதல்ல. கமல் ஹாசனுக்கு எதிராக அமைச்சர்கள் ஆத்திரத்தில் கருத்துக் கூறுவது நல்ல அரசுக்கு அழகல்ல.
தமிழக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுபவர்களை மிரட்டுவது சரியான பண்பான நடைமுறை ஆகாது. அப்படி ஒரு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினால் அதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்குள் நுழைய முடியாத கடும் சூழல் நிலவுகிறது. இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படாததால் தமிழக அரசுக்கு பெரிய பங்கம் ஏற்பட்டுள்ளது.