கமல், ரஜினி மட்டுமல்ல, இன்னும் வேற பெரிய நான்கு நடிகர்கள் கூட வரட்டும். எனக்கு ஒரு துளிக் கவலையும் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆணித்தரமாக கூறியுள்ளார். கதிராமங்கலத்து பிரச்சசனையைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்திற்கு வருகை தந்த தலைவர் விஜயகாந்த் அங்கு போராட்டம் நடத்தி வரும் மக்களைச் சந்தித்தார். அவர்களது போராட்டத்திற்கு தனது ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தெளிவாக பேசினார் விஜயகாந்த்.
அப்போது செய்தியாளர்கள் அவரிடம், கமல், ரஜினி அரசியல் வருகை குறித்து கேட்டனர். அதற்கு விஜயகாந்த் தனது ஸ்டைலில், கமல், ரஜினி வரட்டும். கூடவே வேற நான்கு நடிகர்கபம் கூட வரட்டும். எனக்கு துளிக் கவலையே இல்லை.
அவர்கள் வரட்டும். எனக்கு அது பற்றி ஒன்றும் இல்லை என்றார் விஜயகாந்த். இந்தித் திணிப்புகுறித்த கேள்விக்கு விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களுக்கு பதிலளிக்கையில், இந்தி படிப்பதையெல்லாம் பார்ப்பது திணிப்புன்னு சொல்லக் கூடாது. அது திணிப்பு ஆகாது என்று தனது ஸ்டைலில் வித்தியாசமாக விளக்கம் அளித்தார்.