சென்னை : சினிமாவில் காசு குறியாக சம்பாதிக்கும் நடிகர் கமல்ஹாசன் சமுதாயம் பற்றி பேசக் கூடாது என்று பாஜக தேசியச் செயலாளர் எச். ராஜா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்சியில் ஒன்றில் பேசிய எச்.ராஜாவிடம் கமல்ஹாசனை முதுகெலும்பில்லாதவர் என்று தாறுமாறாக விமர்சிப்பது குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்புகிறார், அதற்கு எச். ராஜா சினிமாவில் காசு மட்டுமே சம்பாதிக்கும் நடிகர் கமல்ஹாசன் சமுதாயம் பற்றி பேசக்கூடாது என்கிறார்.

கமல் அரசியலுக்கு வந்தால் திமுகவிற்குத் தான்
முதல் ஆபத்து. நாத்திக, இந்து விரோத கொள்கையுடைய கமல்ஹாசனை
வேண்டுமென்றே அரசியலுக்கு தூண்டிவிட்டு அவரை தங்களது கட்சியில் சேர்த்துக் கொள்ள நினைத்தால் அது திமுகவிற்குத் தான் பெறும் ஆபத்து. நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அதாவது நான் என்றோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று
இது தொடர்பாக கமல்ஹாசன் வெளிப்படையாக அறிக்கை வெளியிடும் முன்னரே அவரை விமர்சித்திருந்தார் எச்.ராஜா. முதுகெலும்பில்லாதவர் கமல்
சுத்த கோழை ன்றெல்லாம் பேசியதற்காகத் தான் எலும்பு சிகிச்சை வல்லுநர் ராஜா என்று
பட்டம் சூட்டி கமல் கிண்டலடித்திருந்தார். இந்நிலையில் இன்று மீண்டும் அவரை சீண்டிய
விதமாக ராஜா பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது