பாஜகவில் ஓபிஎஸ் இணைய முடியாத நிலையில் தமிழகத்தில் அதிரடி சிறப்பு அரசியல் மாற்றங்களை அரங்கேற்ற பாஜக வியூகம் வகுத்துள்ளதாக டெல்லி நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கோலோச்சும் கொங்கு அமைச்சர்கள் பலரும் பயந்து அதிர்ந்து போயுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தின் தற்போதைய பாஜக தலைவர்களை வைத்துக் கொண்டு ஒரு கைப்பிடிகூட முன்னேற முடியவே முடியாது என திட்டவட்டமாக உளவுத்துறை அறிக்கை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. இதனால் ஓபிஎஸ் கோஷ்டியை பாஜாகாவில் வளைத்துப் போட்டு முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சிக்கிறது பாஜக. ஓபிஎஸ் கோஷ்டி பாஜகவில் இணையாத ஒத்துவராத நிலையில் பிளான் பி-ஐ அதிரடியாக அரங்கேற்ற வியூகம் வகுத்துள்ளதாம் பாஜக.
அதிமுகவின் இரு கோஷ்டிகளையும் இணைத்து வைத்து ஓபிஎஸ்-க்கு பெரிய பதவியான துணை முதல்வர் பதவியை கொடுப்பது; அத்துடன் சில்ச் முக்கிய இலாகாக்களை ஓபிஎஸ்ஸிடம் கொடுத்து எடப்பாடி பழனிசாமியை டம்மி முதல்வராக்குவது முதல் நடவடிக்கையாம்.