அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திடுப்பென்று 'அண்ணன் ஓபிஎஸ்' என குறிப்பிட்டு திடீரென பாசமழை கொட்டி பொழிந்துள்ளார். ஜெ. மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சில அதிகார போட்டி ஏற்பட்டதையடுத்து அக்கட்சி 3 அணிகளாக தற்சமையம் உடைந்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிமுக தலைமை கழகம் மற்றும் கட்சியை கைப்பற்றும் திட்டத்தில்முழு வீச்சில் உள்ளார் டிடிவி தினகரன். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் நேரடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதைப்பற்றி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஜெயக்குமார் பேச்சுவார்த்தைக்கான
எப்பொழுதும் கதவு
திறந்தே இருக்கிறது
என்றும் கூறினார்.
மேலும் அமைச்சர்கள்
எம்எல்ஏக்கள் என
அனைவரும் இரு
அணிகளும் ஒன்றாக இணைவதைதான்
விரும்புகின்றனர் என்றும்
அவர் கூறினார்.