சத்துணவு கூடங்களில் அழுகிய முட்டைகள் அவித்து வழங்கப்படவில்லை என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா இப்போது கூறியுள்ளார். கமல் ரசிகர்கள் அளித்த முட்டைப் புகாரை அடுத்து பெரம்பலூர், குன்னம், வேப்பந்தட்டை ஆகிய ஊர்களில் சத்துணவுக் கூடங்களில் அழுகிய முட்டை கொடுக்கப்பட்டு உள்ளதா என்று மாவட்ட ஆட்சியர் சாந்தா ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து அழுகிய முட்டைகள் அளிக்கப்படவில்லை என்று ஆட்சியர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களில் அழுகிய முட்டைகள் அவத்து வழங்கப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து கமல் நற்பணி மன்றத்தினர்,ரசிகர்கள் ஜூலை 24ஆம் தேதி சென்று தாங்களே ஆய்வு நடத்தினர்.
அப்போது அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதை இவர்கள் கண்டு பிடித்துள்ளனர். கமல் ரசிகர் மன்றத்தினர் புகார் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர், கமல் தனது சொந்த டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே உடனடியாக சாந்தா நடவடிக்கை எடுத்தார். ஆய்வுக்குப் பிறகு நம் செய்தியாளர்களிடம் பேசிய சாந்தா, மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் கொடுக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக கூறினார்.இதுபோல் ரஜினியும் நேரடியாக கமல் போல் கேள்வி கேட்பாரா??