இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கின் உலக அளவில் ஒட்டு மொத்த அளவு 8.3 பில்லியன் டன்கள் என தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த ஒரு 65 ஆண்டுகளாவே பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியும் பயன்படுத்துதலும் கட்டுக்கடங்காமல் போயிவிட்டது. இது எவ்வளவு என்றால் ஏறக்குறைய 100 கோடி யானைகளின் எடைக்கு ஒப்பானது.
பிளாஸ்டிக் பொருட்கள் மிகக்குறைந்த அளவே(குறிக்கப்பட்ட அளவைவிட) பயன்படுத்தப்பட்டு உடனே கழிவாக தூர வீசி எறியப்படுகிறது என்பதும், பிளாஸ்டிக்கை அத்ன் காலம் வரை முழுமையாக பயன்படுத்துவதில்லை என்பதும் கவலையளிக்கக் கூடிய விசயங்கள்.'பிளாஸ்டிக் கிரகமாக பூமி முற்றிலும் மாறும் காலம் வெகுதொலைவில் இல்லை. இந்த உலகில் நாம் வாழ விரும்பினால், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை, அதிலும் குறிப்பாக சின்ன விஷயத்திற்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பற்றி சிந்திக்கவேண்டும்' என்று டாக்டர் ராலைண்ட் கேயேர் பிபிசியிடம் தெரிவித்தார்