
அதிமுகவில் தனி அணியாக விஸ்வரூபமெடுத்திருக்கும் தினகரன் ஆட்சிக்கு எதிராக மும்முரம் காட்டி வருகிறாராம். இன்றைய மேலூர் பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகளை தினகரன் வெளியிட வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. அதிமுக என்கிற கட்சி தங்களது பிடியில் இருந்து நழுவிச் செல்வதை சசிகலா தரப்பு விரும்பவில்லை.
ஆட்சியை கைப்பற்றுவது என்பதற்கு அப்பால் கட்சிதான் முக்கியம் என கருதுகின்றனர் சசிகலா தரப்பு.இதற்காகவே ஒன்றாக கை கோர்த்து அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பகீரத பிரயத்தனம் மேற்கொள்கின்றனர். இதன் ஆரம்பக் கட்டமாக மதுரை மேலூரில் இன்று பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிக முக்கியமான பிரபல அரசியல் தலைவர் ஒருவரிடம் போனில் தினகரன் பேசியிருக்கிறார்.
அதிமுக ஆட்சிக்கு எதிரான தந்திரங்கள் மேற்கொள்வது குறித்து அந்த மூத்த தலைவரிடம் தினகரன் விவரித்தார் என கூறப்படுகிறது.அந்த தலைவரும் சில ரகசிய ஆலோசனைகளைக் கூறினாராம். இதனடிப்படையில்தான் தினகரன் படு உற்சாகமாக குஷியோடு வலம் வந்து கொண்டிருக்கிறாராம்.எதிர்பாராத திசையில் இருந்து கிடைத்த மிகப் பெரிய ஆதரவை சரியாக பயன்படுத்திக் நன்கு கொள்ள வேண்டும் என சசிகலா தரப்பு நினைக்கிறது. இதனைத்தான் இன்றைய மேலூர் பொதுக்கூட்டத்தில் பாருங்கள் என தினகரன் கூறி வருகிறாராம்