அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் என்ன இணையாவிட்டால்
எனக்கு என்ன என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்
இன்று தெரிவித்தார். அதிமுக இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை
தற்போது நடந்து வருகிறது.இணையப் போவதாக
மக்களிடையே நேற்று பெரும்
பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து சென்னையில் சீமானிடம் செய்தியாளர்கள்
கருத்து கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த அவர் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து 3 மாதங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அது இணைந்தால் என்ன, இணையாமல் போனால் எனக்கென்ன என்கிறார்

நீட் தேர்வில் ஓராண்டுக்கு மட்டும் விலக்கு என்பது
ஏன். கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலன்கருதி தமிழகத்திற்கு
எல்லா நேரத்திலும் நிரந்தர விலக்கு தேவை என்றார் அவர்.