முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கென ஒரு தனி டிவிட்டர் அக்கவுண்ட் துவக்கப்பட்டு அரசு மற்றும் முதல்வரின் நடவடிக்கைகள், திட்டங்கள் டக்டக் என்று அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் புதிய இணைப்புக்கு பிறகு சமூக வலைத்தளம் மூலமான மக்கள் தொடர்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனம் மிகுந்த செலுத்த ஆரம்பித்துள்ளார்.
திதாக தொடங்கப்பட்ட கணக்கு என்பதால் டிவிட்டர் இன்னும் அதை 'வெரிஃபைட்' அங்கீகாரம் தரவில்லை. இருப்பினும் இதுதான் முதல்வரின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு என்று நெருங்கிய அதிமுக ஐடி பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துணை முதல்வராகும் முன்பிருந்தே ஓ பன்னீர்செல்வம் டிவிட்டரில் தீவிரமாக செயல்பட்டு ஆர்வம்காட்டி வருகிறார். இந்த நிலையில் இப்போது முதல்வரும் டிவிட்டர் களத்தில் குதித்துள்ளார்.