கால் முறிந்த நிலையில் சென்னை அரசு பொது ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்கவே மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி என்ற 55 வயது பெண்மணிக்கு விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஆதார் அட்டை மற்றும் மருத்துவக்காப்பீடு திட்ட அட்டை இல்லை எனபதை காரணமாகக்கூறி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆதார் அட்டை இல்லை என எந்த வித சிகிச்சை அளிக்க மறுத்ததால் வேதனையுடன், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் அரசு ஆதார் மற்றும் காப்பீடு திட்ட அட்டை வழங்கும் அலுவலகத்துக்கு சரஸ்வதி உடனே சென்றுள்ளார்.
அங்கே அதிகாரிகள் அலைக்கழித்துள்ளனர்ஆதார் அட்டை வழக்கில் இன்று மிக முக்கிய தீர்ப்பினை உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தீர்ப்பளித்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஆதார் அட்டை இல்லாமல் பெண் ஒருவர் அலைக்கழிக்கப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.