
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள பிரபல சக்தி விநாயகர் கோவிலில் 36 கிலோ எடைகொண்ட ஒரே பெரிய கொழுக்கட்டை தயாரிக்கப்பட்டு விநாயகருக்கு படையலிட்டு சிறப்பு பூஜை இன்று செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரை மனதார வழிபட்டனர். அவர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதமாக வழங்கப்பட்டது.

பின்னர் கொழுக்கட்டையை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. இன்று சுவாமி பல்லக்கில் வீதி உலாவும் இசக்கி அம்மனுக்கு அன்னப் படையலும் சிறப்பாக நடைபெறுகிறது.