

இது இந்தியாவில் எப்போது ஏற்பட்டிராத ஒரு அசுர வேக வளர்ச்சி. இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 2 டிரில்லியன் டாலர் எனில் இந்த பணக்காரர்கள் 20 பேரின் மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர்.

ஆக ஒட்டுமொத்த இந்தியாவின் மதிப்பில் அதாவது 10 சதவீதம் இவர்களின் கைகளில் உள்ளது. 20 பில்லியனர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரான பிரபல முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 7 மாதத்தில் 13 பில்லியன் டாலர் அளவிற்கு அதிவேகமாக உயர்ந்துள்ளது. அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானிஷ விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜி, டிமார்ட் நிறுவன தலைவர் ஆர்கே தமனி ஆகியோரும் 50 பில்லியன் டாலர் வளர்ச்சிக்கு காரணம்.