நீட் தேர்வுத் திணிப்பால், மருத்துவப் படிப்பு படிக்க வேண்டும் என்கிற லட்சிய கனவு பல மாணவர்களுக்கு பலிக்காமல் போனது. அப்படி நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவிதான் அனிதா. ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் கண்டிப்பாக மருத்துவர் ஆகியே தீர வேண்டும் என பன்னிரெண்டாம் வகுப்பில் 1176 கஷ்டப்பட்டு மதிப்பெண்களை எடுத்தார்.
ஆனால் நீட் தேர்வால் இவருடைய மருத்துவராகும் கனவு மேகமாய் கலைந்தது.மேலும் நீட் தேர்வுக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில், நடிகை ரோகிணி மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் அங்கு கூடி இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் வேறியாக கலந்துகொள்வது குறித்து நடிகை ரோகிணி கூறுகையில் "நீட் தேர்வு தற்போதைக்கு மாணவர்களுக்கு தேவை இல்லாதது. உடனடியாக நீட் தேவை தமிழகத்தில் ரத்து செய்யவேண்டும்" நீட் தேர்வால் பல்வேறு மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் அவர்கள் ஆசைப் பட்ட கனவு படிப்பைப் படிக்க முடியாமல் போகிறது. இந்த நிமிடம் வரை மாணவர்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்” என்று ரோகிணி தெரிவித்தார்.