நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி செப்டம்பர் 9ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அவர்காளது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியமானது :
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு நீட் என்னும் கஷ்டமான நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்து, மாநில அரசின் துணையோடு அதனை கட்டாயமாக மாணவர்கள் மீது வலுக்கட்டாயமாக திணித்திருக்கிறது. தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகள் கண் முன்னே பறிபோவது நம்மை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பள்ளிக் கல்வியை வெவ்வேறு பாடத்திட்டங்கள் வழியாக மாணவர்கள் பயின்று வரும் இந்த சூழ்நிலையில் சிபிஎஸ்இ என்ற மத்திய அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மட்டும் பெரும் பயன் அமையும் வகையில் நீட் தேர்வுக்கான கேள்வித் தாள்கள் கஷ்டமாக அமைந்துள்ளது.
மாநில அரசின் பாடத்திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் எவ்வளவு திறமையும், அறிவும் கொண்டிருந்தாலும் நீட் தேர்வை நம் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. பெற்றோர் மற்றும பொதுமக்கள் பெருந்திரளான படை அளவில் பங்கேற்க வேண்டும். நம் உணர்வுகளை வெளிக்காட்டிட இதனை செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன், என்று தினகரன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.