ஆஸ்திரேலியாவில், ஆட்டுக்குட்டி இறைச்சி விற்பனையை பெரிதாக அதிகரிக்க உருவாக்கப்பட்ட ஒரு விசித்திர விளம்பரத்தில், விநாயகர் படம் இடம் பெற்று இருப்பது நமது இந்துக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா இறைச்சி மற்றும் கால்நடைகள் (எம்.எல்.ஏ.,) என்ற பிரபல நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள விளம்பரத்தில், ஒரு உணவு மேஜையை சுற்றி, புத்தர், ஜூயுஸ் , விநாயகர், இயேசு உள்ளிட்ட பல கடவுள்கள் அமர்ந்து இருக்கின்றனர்.


அவர்கள், ஆட்டுக்குட்டி இறைச்சி உணவை புகழ்வது போல விளம்பரம் விசித்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவில் உள்ள இந்துக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

A man dressed as the God Ganesha holds up his finger. He has the head of an elephant.

மேற்கு ஆஸ்திரேலியா இந்திய சங்கத்தின் செய்தி தொடர்பாளர் நிதின் வாசிஸ்வத் இதைப்பற்றி கூறுகையில், '' விநாயகர் விளம்பரம் சம்பந்தமில்லாமல் அர்த்தம் இல்லாமல் உள்து. அவர் ஆட்டுக்குட்டி இறைச்சியை சாப்பிடுவது போல மோசமாக விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது,'' என்றார். இது குறித்து ஆஸ்திரேலியா தர வாரியத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Find out more: