நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்கள் போராட்ட பீதியால் தற்போது சென்னை மெரினா கடற்கரையின் அனைத்து முக்கியமான நுழைவு பகுதிகளையும் பேரிகார்டர்களை வைத்து யாரு போக முடியாமல் இழுத்து மூடியுள்ளது சென்னை போலீஸ்.
உலகை திரும்பிப் பார்க்க வைத்தது நம் ஜல்லிக்கட்டுக்கான மெரினா புரட்சி. அதைத் தொடர்ந்து சென்னை போலீசாருக்கு கடற்கறை மெரினாவுக்குள் யார் நுழைந்தாலும் பீதிதான்
அதுவும் கருப்பு சட்டையுடன் நுழைந்துவிடாலே போதும்... உடனே அலறி அடித்துக் கொண்டு வெளியேற்றி விடுகிறது போலீஸ். மெரினா மீண்டும் போர்க்களமாகிவிடக் கூடாது என்பதில் சென்னை போலீஸ் கண்ணும் கருத்துமாக உள்ளது.
இந்த கண்காணிப்பை மீறி நேற்று ஜெயலலிதா நினைவிடத்தை மாணவர்கள் போர்க்களமாக்கி கடுமையாக போராடினர். இதனை எதிர்பாராத சென்னை போலீசார் ஒட்டுமொத்தமாக சென்னை மெரினா கடற்கரையையே இன்று இழுத்து மூடிவிட்டது.