டெல்லி: பெண்களை ஆண்கள் போல் ராணுவ போலீஸ் பதவியில் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று லெப்டினன்ட் ஜெனரல் அஷ்வானி குமார் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 800 மகளிரை அடுத்த வரும் 5 வருடங்களில் பணியமர்த்த உள்ளதாகவும் வருடத்திற்கு 52 பெண்கள் வீதம் அவர்கள் தேர்ந்தெடுக்கபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
2 பிரதான இராணுவ குடியிருப்பு பள்ளிகள் அமைக்க மத்திய பாதுகாப்புத்துறை தற்சமையம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் பள்ளிகள் முறையே போபால் மற்றும் பஞ்சாப் மாநிலம் மாமூன் ஆகிய முக்கிய இடங்களில் அமைக்கப்படவுள்ளதாகவும் லெப்டினன்ட் ஜெனரல் அஷ்வானி குமார் பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தார்.