சென்னையில் உள்ள கிரீன் வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் இன்று சந்தித்து பேசினார்.
எடப்பாடியும் பன்னீரும் இணைந்ததால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வரை மாறியே ஆக வேண்டும் என ஆளுநரிடம் நேற்று கடிதம் அளித்தனர். ஆனால் ஆளுநர் இதுகுறித்து தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது என எதிர்கட்சிகளிடம் தூது விட்டார். இதனிடையே டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேர் புதுச்சேரி ரிசார்ட்டில் படு குதுகூலமாக தங்கிவிட்டு நேற்று ரிசார்டிலிருந்து திரும்பினர்.
இதைதொடர்ந்து நேற்று சென்னைக்கு வந்த கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன், சபாநயகர் தனபாலை சந்தித்து, தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முழு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
இதையடுத்து, டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை லேசாக ஆக குறைந்துள்ளது.