ஒட்டு மொத்த தமிழர்களும் தன் தங்கை என்றும் அன்பு மகள் என்றும் அழைத்து வருத்தத்துடன் மரியாதை செய்து கொண்டிருக்கிறது நீட் கொடுமையால் இன்னுயிரை இழந்த மாவட்ட முதல் மாணவி அனிதாவை. அனிதா இறந்து பத்து நாட்களாகியும் கூட தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை தமிழர்கள் முன்னெடுத்து வருகிறார்கள் மாணவி அனிதாவின் உருவப்படத்தை தங்களில் கைகளில் தாங்கியபடி.
விஜய் அனிதாவின் வீட்டுக்கே போய், அனிதாவின் தந்தையை நேராய் சந்தித்து, என்ன விதமான உதவிகளையும் செய்யத் தயார் என்று கூறி, அனிதாவுக்கு அவர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
இந்த நிலையில், இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், இறந்த மாணவி அனிதாவின் படத்தை வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.