கமலின் அரசியல் பிரவேசம் குறித்த பரபரப்பு பேச்சை வைத்து நெட்டிசன்கள் வரவேற்று, தங்களுக்கே உரிய நக்கல் நகைச்சுவையோடு கலாய்த்து வருகின்றனர். சென்னை கமலின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சை வைத்து சில நெட்டிசன்கள் வரவேற்றும், சிலர் கலாய்த்தும் வருகின்றனர். சென்னையில் நேற்று நடைபெற்ற பிரபல பத்திரிக்கை நிறுவன விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வர தயார் என்றார்.
மேலும் ரஜினியுடன் இணைந்து செயல்படவும் நான் தயார் என்றும் அவர் கூறினார். கமலின் இந்த பேச்சை வைத்து நெட்டிசன்கள் பலவிதமான மீம்களை வெளியிட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.