டெங்கு காய்ச்சலினால்
எற்படும் மரணங்கள் கூடி வருவதால் கொசுக்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
உடனே செய்யப்படும் என்று சேலத்தில் போராட்டம் நடத்திய பெண்கள்
கடுப்பில் கூறியுள்ளனர். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மரணங்கள்
சில மாதங்காளாக அதிகரித்து வருகின்றன. பல மரணங்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டு விடுகின்றன. டெங்குவிற்கு 15 பேரும் சிக்குன்குனியாவிற்கு 32 பேரும் என மொத்தம் 47 பேர் மட்டுமே காய்ச்சலுக்கு பலியாயிருப்பதாக அரசு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் புள்ளிவிபரம் ஒன்றை கூறியுள்ளது. மர்மகாய்ச்சலுக்கு பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.
இதனையடுத்து சேலம் அஸ்தம்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் முன்பு, தமிழ்நாடு பெண்கள் சங்கத்தின் சார்பாக சுகாதார கவனிப்பு இல்லாததால் எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். டெங்கு கொசு உற்பத்தியைத் தடுப்பதற்கு பெரிய மருத்துவர்கள் குழுவோடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்து டெங்கு கொசுக்களுக்கு உடனே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினர்.
கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே கொசுக்களுக்கு குடும்பக் கட்டுபாடு செய்து
அதற்கான சீர்வரிசையை சுகாதார அமைச்சருக்கும் சுகாதார செயலாளருக்கும் அனுப்புவோம்.
நெல்லையில் கொசு உற்பத்தியை கவனிக்காமல்
விட்ட மாநகராட்சியைக் கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கொசுவலையைப் போர்த்தியபடி
வித்தியாசமான ஆர்பாட்டம் நடத்தினர். அதோடு கொசு உற்பத்தியில் சாதனை படைத்த மாநகராட்சி என்ற விருதுக்கு
மற்றும் உரிய சான்றிதழையும் கோப்பையையும் கொடுத்தனர்.