சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் மீது, திருவனந்தபுரம் - சென்னை ரயிலில் பயணம் செல்கையில் ஒரு குழந்தையிடம் தகாத முறையில் நடந்த குற்றத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அக்குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் படி, ரயில் திருப்பூரை கடந்து சென்று கொண்டிருக்கையில், குழந்தையின் பெற்றோர் தூங்கி கொண்டிருந்த பொழுது, பிரேம் ஆனந்த் உறங்கிக்கொண்டிருந்த குழந்தையின் மேல் கைவைத்துள்ளார். அவர் மீண்டும் மீண்டும் தனது மார்பின் மீது கைவைக்கவே குழந்தை அலறிட, உறக்கத்திலிருந்து எழுந்த பெற்றோர், பிரேமிற்கு தர்ம அடி கொடுத்து போலீசில் பிடித்து கொடுத்துள்ளனர்.

ஐம்பத்தி ஏழு வயதான பிரேம் ஆனந்த், திரைத்துறையில் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் இடத் தகராறு ஏற்பட்டத்தில் சந்தானத்தால் மூக்கு உடைக்கப்பட்டவர் தான் இந்த பிரேம் ஆனந்த் என்பது கூடுதல் தகவல். இந்நிலையில் ,சிறுமியிடம் தவறாக நடந்தவரை தான் அன்று அடித்தார் சந்தானம் என்று நெட்டிசன்கள் வியந்து பேசி வருகின்றனர்.