கடந்த நாடாளுமனற்ற தேர்தலின் போது மோடி அறிவித்தபடி இன்னும் ஒருவரின் வங்கி கணக்கில் கூட அவர் சொன்ன பதினைந்து லட்சம் வரவில்லையே ? அது எப்போது வரும்? என்று 2016ல் தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்தி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் தகவல் ஆணையமோ இதற்கு பதில் கூற முடியாது என்று கூறிவிட்டது
 பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Related image


கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பரபரப்பான பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, இன்றைய பிரதமர் மோடி,பாஜக வெற்றி பெற்றால் நாட்டில் கருப்பு பணத்தை ஒழித்து, மீட்டெடுக்கப்பட்ட கருப்பு பணத்தை நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் கொடுப்பதாக உறுதியளித்தார். ஆனால் ஐந்து ஆண்டுகள் ஆட்சிக்காலம் நிறைவடைந்து, அடுத்த தேர்தல் வரவே இன்னும் ஒரு ஆண்டு காலமே பாக்கி உள்ள நிலையில், இன்னும் யாருடைய வங்கி கணக்கிலும் பதினைந்து லட்சம் வரவில்லை.


 இதனை பற்றி இரண்டு  ஆண்டுகளுக்கு முன்னர் மோகன் குமார் சர்மா என்பவர் கேட்டிருந்த கேள்விக்கு சமீபத்தில் பதில் வந்துள்ளது. அந்த பதிலில், "நீங்கள் கேட்டுள்ள விஷயம் ஆனது, தகவல் பட்டியலில் வராது என்பதால், இதற்கான விவரங்களை கூற முடியாது" என்று வந்துள்ளது. இதன் மூலம் மக்கள் எவ்வ்ளவு ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகின்றது என்கிறார் மோகன். 


Find out more: