மேகாலயா சுரங்கத்தில் மாட்டிக்கொண்டிருக்கும் 14 ஊழியர்  பற்றி பிரதமர் மோடி கவலை படவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.12ம் தேதி மேகாலயா ஜெயின்டிஷியா மலையில் சுரங்கத்தில் ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது சுரங்கத்திற்குள் தண்ணீர் புகுந்ததும் 14 பேர் நீரில் சிக்கினார்கள்.

Image result for rahul modi

18 நாட்களுக்கு முன் சிக்கிய இவர்களை மீட்க முடியாமல் மீட்பு படையினர் போராடி வருகிறார்கள்.மத்திய அரசு மீட்பு பணியில் ஈடுபடவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "15 ஊழியர்கள் இரண்டு வாரத்திற்கு முன் சுரங்கத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள்.

ஆனால் மோடி போகிபீல் பாலத்தில் நின்று போஸ் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். உயர் அழுத்த பம்ப் தயார் செய்ய கூட இந்த மத்திய அரசு தயாராக இல்லை. பிரதமரே கொஞ்சம் சிக்கியுள்ள ஊழியர்களை காப்பாற்றுங்கள்" என்று கூறியுள்ளார் .


Find out more: