இதில் பதிமூன்று பேர் பரிதாபமாக உயிரிழக்கவே, போராட்டம் வலுவடைந்தது. இதனை தொடர்ந்து தான் அரசு சீல் வைத்து நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. ஆனாலும் பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா முறையீடு செய்யவே அவர்கள் செய்த விசாரணையில் ஸ்டெர்லைட்டால் ஆபத்து இல்லை என்று கூறி மீண்டும் திறக்க சொன்னார்கள்.
அனால் அரசு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடவே, நேற்று இவ்வழக்கை விசாரித்த கோர்ட் ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என்றும், வேதாந்தா வேண்டுமென்றால் சென்னை ஹைகோர்ட்டில் எதாவது பார்த்து கொள்ளட்டும் என்றும் கூறி, பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது, இதனால் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் சந்தோஷம் அடைந்தனர்.