நண்பன் என்று நம்பி வந்தேனே காப்பாற்றுவாய் என்று நினைத்தேன் என்று கூறும் அந்த பெண்ணின் குரல் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு கூறிய கமல் தனது சாட்டையை அரசின் பக்கம் சுழற்றினார். எதனால் இந்த அரசு இந்த கேசில சரியான நடவடிக்கை எடுக்கவில்லை?
காவல் ஆணையர் எதற்காக பெண்ணின் பெயரை கூறினார் அது மாபெரும் தவறு, மேலும் இவ்வாறு வீடியோக்கள் எப்படி கிடைத்தது, எவ்வாறு வெளியானது, இதற்கெல்லாம் என்ன பதில் சொல்ல போகிறீர்கள் சாமி என்று எடப்பாடி பழனிசாமி முதல்வரை நோக்கி கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.