புகாரின் அடிப்படையில் அந்த நான்கு பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த நான்கு பேர் பேர் பின்னணியில் ஒரு ரெளடி கும்பல் உள்ளது தெரிய வந்தது. விசாரணையில் பிரபல ரெளடிகள் ஆனந்தன், கதிர்வேல் இருப்பது தெரிய வந்தது.
ரெளடிகளை பிடிக்க போலீசார் செங்கம் அருகே நான்கு பேர் இருப்பதை அறிந்து சுற்றி வளைத்தனர். அவர்களை கைது செய்த போலீசாரை திடீரென ஆயுதங்களை எடுத்த நான்கு பேர்களும் தாக்க தொடங்கினர். இதில் போலீஸ் படுகாயம் அடைந்ததை அடுத்து போலீசார் துப்பாக்கியால் சுட்டு ரெளடி கதிர்வேலை கொலை செய்தனர். மற்ற மூன்று ரெளடிகளும் தப்பிவிட்டனர்.