
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை பத்து மடங்கு அதிகமாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வரவுள்ளன. வரவிருக்கும் புதிய விதிகளுக்கான மசோதா ஒப்புதல் பெறப்பட்டு, மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புதிய வாகன சட்ட பில் அமல் படுத்த பட்டால், விதிக்கப்படும் அபராதத் தொகையைக் காட்டிலும் பத்து மடங்கு வசூலிக்கப்படும். மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன.