
வங்கிக்கணக்கில் பணம் எடுப்பதற்கு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் பணம் டெபாசிட் செய்வதற்கும் சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கனரா வங்கி ஜூலை 1 முதல் மாதம் மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரம் வரை வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படும் என்றும், அதன் பின்னர் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் ரூ.1 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த சேவை கட்டணத்திற்கு கூட ஜி.எஸ்.தி உண்டு என்பது தான் இன்னும் மிகப்பெரிய கொடுமை ஆகும்.