![](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=750/imagestore/images/politics/politics_latestnews/sdfvsgsdgdfggg-415x250.jpg)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் போலீஸாரால் வைக்கப்பட்டுள்ள ஓர் அறிவிப்பு பலகையால் நகைப்பு உருவாகியுள்ளது. பலகை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. வாகன ஓட்டியின் பாதுகாப்புக்காக போக்குவரத்து போலீஸார் வைத்துள்ள பலகை வாசகமே அதற்கு காரணமாக இருக்கின்றது.
போக்குவரத்து போலீஸார் அந்த பலகையில், குடிக்கும்போது செல்போன் பயன்படுத்த வேண்டாம் என எழுதியுள்ளனர் .வாகனம் ஓட்டும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம் என வழக்கமாக கூறுவார்கள்.
ஆனால் குடிக்கும்போது செல்போனைப் பயன்படுத்த வேண்டாம் என எழுதப்பட்டது கேலிக்கூத்தாகியுள்ளது.