
அரசியலில் நடிகைகளை அலட்சியப்படுத்துவதாகவும் மரியாதை கொடுப்பதில்லை என்றும் விஜயசாந்தி தெரிவித்துள்ளார். நடிகை ரோஜா சந்திரபாபு நாயுடு போன்ற அரசியல்வாதியை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்காக போராடி அவருக்கு பதவி கொடுக்காதது தவறு என்று கூறினார்.
விஜயசாந்தி, தெலுங்கு, தமிழ் மொழிப்படங்களில் ஆக்சன் ஹீரோயினாக பல படங்களில் நடித்தார். தற்போது ஆந்திராவில் அரசியல்வாதியாக திகழ்கிறார். நடிகைகளை அரசியலில் அலட்சிய படுத்துகிறார்கள், மரியாதை கொடுப்பதில்லை.
நடிகை ரோஜா சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து கட்சிக்காக போராடினார். ஆனால் அவருக்கு ஜெகன்மோகன் ரெட்டி பதவி கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது என்றார் விஜயசாந்தி.