
கேமிரா செல்பி சிலசமயம் விபரீதமாக உயிர்கள் பலவற்றை எடுத்துள்ளது. குஜராத்தில் பழம்பெரும் கோவிலுக்கு வந்த பெண் சுற்றுலா பயணி அங்கிருந்த யானை சிலையின் நான்கு கால்களுக்கு இடையே நுழைந்து புகைப்படம் எடுக்க முயன்றார்.
புகைப்படங்கள் எடுத்த பின்னர் வெளியே வர முயற்சித்தபோது வரமுடியவில்லை. சில நிமிடங்கள் போராடி பகுதியில் உள்ளவர் துணையுடன் அவர் வெளியே வந்தார். இதன் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்க்கும் பலர் சுற்றுலா செல்லுமிடத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும் என வீடியோ உணர்த்துகிறது.