இந்தியாவில் சாலை விபத்து காரணமாக உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன. சாலை விபத்துக்களால் ஆண்டுக்கு சுமார் 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக கூறப்படுகிறது. வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறுவதே விபத்துக்களுக்கு காரணம்.
Related image

போதையில் வாகனங்களை  ஓட்டுவது , செல்போனில் பேசி கொண்டே வாகனங்களை ஓட்டுவது இந்தியாவில் சாதாரணமாக நடக்கும். சாலை விபத்து காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உறுதி பூண்டுள்ளன.



போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகை  அதிகரிக்கப்பட்டு வருகிறது. சிசிடிவி கேமராக்கள் மூலம், விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு, அவர்களது வீடுகளுக்கே அபராத ரசீது அனுப்பி வைக்கப்படுகிறது.



Find out more: