

மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், திமுக வெற்றிக்காக உழைத்தார். இதனை தொடர்ந்து திமுகவில் அவருக்கு பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் தனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்று உதயநிதி கூறி வந்தார்.இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் திமுகவின் முரசொலி பத்திரிகையின் நிர்வாக இயக்குனராக இருந்து வருகிறார்.