

பெரிய திரையில் ரசிகர்களின் இதயத்துக்குள் சிம்மானசனமிட்டவர், தமிழ் மற்றும் தெலுங்கு என சின்னத் திரை நடிகையாகவும் ரசிகர்களின் இல்லத்துக்குள் நுழைந்தவர். தற்போது ஆந்திர அரசியலிலும் அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுத்து,. சுறுசுறுப்போடு சுழன்று வருகிறார்.
சமீபத்தில் அவருடைய குழுவில் பணியாற்றிய ஒருவர், கடைசி நேரத்தில் தனது திருமண அழைப்பிதழை நீட்டியிருக்கிறார். குறிப்பிட்ட தினம் பெங்களூர் செல்ல வேண்டியிருந்தாலும், திருப்பதியிலிருந்து நேராக பட்டாபிராம் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு, பெங்களூர் சென்றிருக்கிறார்.