பிறகு செல்போன், டேப்லெட்களை ஹேக் செய்து அதில் உள்ள பைல்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோ, ஆடியோக்களையும் திருடி ஆபாச வலைதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் ஹேக்கர்கள் இதற்கும் மேலே சென்று தனிப்பட்ட முறையில் தற்போது நம் வீட்டில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் டிவிகளை ஹேக் செய்து வருகின்றனர்.
மற்றவைகளை காட்டிலும் ஸ்மார்ட் டிவியை ஹேக் செய்வது என்பது எளிதாக இருக்கின்றது. இந்நிலையில், வீட்டு படுக்கையறையில், வைத்திருந்த ஸ்மார்ட் டிவி முன் தம்பதி ஒருவர் பாலியல் உறவு கொண்டுள்ளனர். இதை ஹேக்கர் ஒருவர் தனது கணினி மூலம் ஹேக் செய்து அந்த வீடியோவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். ராஜேஷ் குமார் என்பவர் தனது படுக்கையறையில் தனது ஸ்மார்ட் டிவியில் ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தில் இருந்தார். மேலும் பெரும்பாலும் வயது வந்தோருக்கான வலைத்தளங்களைப் பார்வையிட்டார். சமீபத்தில், திருமணமான இவர் தனது மனைவியுடன் படுக்கையறையில், பாலியல் உறவு வைத்துள்ளார்.
இந்நிலையில், ராஜேஷ் குமார் ஒரு ஆபாச வலைதளத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, அவர் மனைவியுடன் நெருக்கமாக இருந்த காட்சியில் அந்த தளத்தில் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்நிலையில் எப்படி எந்த காட்சிகள் ஆன்லைன் தளத்திற்கு சென்றது என்று அவரும் ஆய்வு செய்தார். அப்போது ஒரு குறிப்பிட்ட ஆபாச வலைதளத்திற்கு காட்சிகளை இவர் பார்த்த போது, ஹேர்கர்கள் டிவியின் உள்ளே நுழைந்து, காட்சிகளை படம் பிடித்து இருப்பதும் தெரியவந்தது. இதை வெகு தூரத்தில் இருந்தும் செய்தது அம்பலமானது. இதனால் மிகவும் அதிர்ச்சியடைந்த அவர் அந்த ஆன்லைன் தளத்திற்கு, புகார் அளித்தார். இதன் பிறகு காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டது