ஹெல்மெட் அணிய வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசம் கவுதம புத்த நகர் மாவட்டத்தில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா நகரங்களில் ஒரு விதி இதற்கு உதாரணம்.
இவ்விரு நகரங்களில் அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வந்தால் மட்டுமே எரிபொருள் நிரப்ப வேண்டும்.
பின்னால் அமர்ந்து பயணம் செய்பவரும் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும். ஒருவர் அணியாவிட்டால் அந்த டூவீலருக்கு எரிபொருள் நிரப்ப கூடாது. விதிமுறையை பின்பற்ற தவறிய பெட்ரோல் பங்க் மீது அதிரடி நடவடிக்கையாக 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.