வேலூரில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக கனமழை பெய்து வருகிறது என்று . தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தற்போது வேலூரில் மிக அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது. அங்கு கடந்த மூன்று நாட்களாக விடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வேலூரில் எப்போது வெயிலான வானிலை நிலவும். மற்ற மாவட்டங்களில் மழை பெய்தாலும் வேலூரில் பெரும்பாலும் எப்போதுமே மழை பெய்யாது. ஆனால் தற்போது மற்ற மாவட்டங்களை விட மிக அதிகமாக வேலூரில் மழை பெய்து வருகிறது. தமிழ்கத்தில் வட மாவட்டங்கள் முழுக்கவே நன்றாக மழை பெய்து வருகிறது. வேலூரில் இன்றும் நாளையும் மேலும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் வேலூர் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் செய்துள்ளார்.
அதில், வேலூரில் நான் இப்படி ஒரு மழையை பார்த்ததே இல்லை. மிக அதிகமாக அங்கு கனமழை பெய்து வருகிறது. வேலூரில் கடந்த சில வருடங்களாக இவ்வளவு மழை பெய்யவில்லை. வேலூரில் ஒரே நாளில் நேற்று முதல்நாள் 166 மிமீ மழை பெய்து உள்ளது. இதற்கு முன் இப்படி அங்கு வானிலை இருந்தது இல்லை. 100 வருடத்திற்கு பின் இவ்வளவு மழை பெய்துள்ளது. இதற்கு முன் 1909ல் ஆகஸ்ட் 8ம் தேதி 106 மிமீ மழை பெய்ததே அங்கு பெய்த கனமழை ஆகும்.
100 வருடத்திற்கு பின் இவ்வளவு மழை பெய்துள்ளது. இதற்கு முன் 1909ல் ஆகஸ்ட் 8ம் தேதி 106 மிமீ மழை பெய்ததே அங்கு பெய்த கனமழை ஆகும்.