சில நாட்களாக அதிமுக அரசு குறித்து கமல் பேசுவது தொடர்ந்து வருகிறது. கல்லூரி ஒன்றின் விழாவில் பேசிய கமல்ஹாசன், அதிமுக அரசையும் அமைச்சர்களையும் விமர்சனம் செய்தார். இந்த அரசு தேவைதானா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். இந்நிலையில் கமல்ஹாசனின் விமர்சனம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் "இந்த அரசு சமூகத்திற்கு தேவையான என்பதை கமல் தீர்மானம் செய்ய முடியாது, மக்கள் தான் செய்ய வேண்டும்.
கமல் என்ற நடிகர் சொல்லிவிட்டால் தாக்கம் ஏற்படபோவதில்லை.கமல் பல்டி அடிச்சாலும் தமிழக ஆட்சியை பிடிக்க முடியாது. அதிமுக எதிர்த்து கருத்து கூறினால் மட்டுமே கமல் அரசியல் செய்ய முடியும் என கருத்து தெரிவித்து வருகிறார்" என்று கூறினார். அதிமுக எதிர்த்து கருத்து கூறினால் மட்டுமே கமல் அரசியல் செய்ய முடியும் என கருத்து தெரிவித்து வருகிறார்" என்று கூறினார்.