புதுச்சேரியில் மிகவும் பிரசித்தி பெற்ற கௌசிக பாலசுப்பிரமணியர் கோவில் கந்தசஷ்டி விழாவில் முருகர் முகத்தில் வியர்வை போன்று வடிந்த நீர் துளிகளைக் கண்டு பக்தர்கள் மெய் சிலிர்த்துப் போயினர். கந்த சஷ்டி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து முருகன் திருத்தலங்களில் நேற்று சூர சம்ஹார விழாவும் கோலாகலமாக நடைபெற்றது. திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட சூர சம்ஹார நிகழ்வு நேற்று நடைபெற்றது.
Image result for முருகர் சிலையின் முகத்தில் வியர்வைத் துளிகள்

இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள புகழ் பெற்ற கோவில் ஒன்றில் முருகன் சிலையின் முகத்தில் வியர்வைத் துளிகள் ஏற்பட்டதால் பக்தர்கள் சிலிர்த்துப் போனார்கள்.  புதுச்சேரி ரெயில் நிலையம் அருகே ஸ்ரீ கௌசிக பாலசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வள்ளி தெய்வானை உடனுறை கௌசிக பாலசுப்பிரமணியரை தரிசிக்க அனைத்து மதத்தினரும் வருகை தருகின்றனர். இக்கோயிலை கட்டியவர் முகமது கௌஸ் என்ற இஸ்லாமியர் என்பது இக்கோவிலின் கூடுதல் சிறப்பு.



இந்நிலையில் இந்த கோவிலில் கந்த சஷ்டி விழாவின்போது பாலசுப்ரமணிய சாமிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சியின் போது, திடீரென முருகர் உற்சவ சிலையின் முகத்தில் நீர்த்துளிகள் முத்து முத்தாக நின்றன. இதை பார்த்த கோவில் பூசாரி பக்தர்களிடம் தெரிவித்தார். இதனை கண்ட பக்தர்கள் பக்தி பரவசமடைந்து முருகனுக்கு அரோகரா என கோழமிட்டபடி முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். கந்தசஷ்டி விழாவில் வேல் வாங்கும் நிகழ்ச்சியின்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக கௌவுசிக பாலசுப்ரமணியசாமி கோவிலில் முருகர் உற்சவர் சிலையின் முகத்தில் வியர்வை போன்று நீர்த்துளிகள் வருவது குறிப்பிடத்தக்கது.


Find out more: