ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம். சரேகமா, டைம்ஸ் மியூஸிக், சோனி மியூசிக், டி சீரிஸ், யூனிவர்ஸல் மியூசிக், வீனஸ் உள்ளிட்ட 340க்கும் அதிகமான இசை நிறுவனங்களின் 30 லட்சத்துக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பாடல்களை, பொது நிகழ்ச்சிகளில் ஒலிபரப்ப / ஒலிப்பதிவு உரிமையையும், வானொலி ஒலிபரப்பு உரிமையையும், அதற்கான கட்டணத்தை வசூலிக்கும் உரிமையையும் பெற்றுள்ளது.
ஒவ்வொரு வருடமும், திரைத்துறை மட்டும் நூற்றுக்கணக்கான பாடல்களைத் தயாரிக்கிறது. அதில் பல பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக நிலைக்கிறது. இன்று இந்திய இசை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால் அவர்களின் அறிவுசார் சொத்துக்கு ரசிகர்கள் இல்லை என்பது கிடையாது. அந்த சவால், பெரும்பாலான இந்தியர்களுக்கு தாங்கள் ரசிக்கும் இசைக்கான பணத்தைத் தர வேண்டும் என்றோ அல்லது அது பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான். இந்த துரதிர்ஷ்டவசமான உண்மைதான் உணவகங்கள், பார்கள், பொது நிகழ்ச்சி நடத்தும் நிறுவனங்கள், கஃபேக்கள் எனப் பல இடங்களில் பிரதிபலிக்கிறது. இவர்கள் PPL அமைப்பிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் இசையை ஒலிக்கச் செய்து தொடர்ந்து அறிவுசார் சொத்துரிமை சட்டங்களை மீறி வருகின்றனர்.
காப்புரிமை சட்டம் 1957ன் படி, பொது நிகழ்ச்சிகளில் ஒரு பாடலை பயன்படுத்தும் முன், காப்பரேட் நிறுவனமோ அல்லது தனிநபரோ, அந்த இசையின் காப்புரிமை பெற்றவர்களிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால் ஒவ்வொரு இசை நிறுவனங்களையும் தனித்தனியாக அணுகுவதற்குப் பதிலாக இந்த உரிமையைத் துரிதமாகப் பெறும் வழி PPL அமைப்பிடமிருந்து உரிமை பெறுவதே. ஏனென்றால் PPL நிறுவனம் இசை நிறுவனங்களிடமிருந்து பிரத்தியேக உரிமத்தைப் பெற்றுள்ளது.
காப்புரிமை பெறப்பட்ட பாடல்களுக்கான உரிமத்தை வழங்கக் காப்புரிமை சட்டம் பிபிஎல் அமைப்பு அனுமதி அளித்துள்ளது. PPL அமைப்பு பெரும்பாலான தமிழ், இந்தி மற்றும் பிராந்திய மொழிப் பாடல்களின் உரிமைகளைப் பெற்றுள்ளது. பல சர்வதேச இசை நிறுவனங்களின் பாடல்களுக்கான பொது நிகழ்ச்சிகள் மற்றும் வானொலி ஒலிபரப்பு உரிமையையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. உரிய அனுமதி பெற வேண்டும் என்று PPL அமைப்பு அனைத்து நிறுவனங்களையும் கேட்டுக்கொள்கிறது. காப்புரிமை சட்டம் 1957 பிரிவு 51 மற்றும் 63ன் கீழ் எந்த குற்றமாக இருந்தாலும் அது சட்டவிரோதம் மற்றும் தண்டனைக்குரியது.