கொரானா வைரஸ் பீதி காரணமாக மளிகை பொருட்கள் வரத்து இல்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர் மளிகை பொருட்கள் வரத்து 95% குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய உணவுப்பொருட்கள் வரத்து குறைந்துள்ளது. தற்போதைய சூழலில் ஒரு சில பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த பொருட்களின் விலையும் கடுமையாக ஏறி உள்ளது. இந்த விலை உயர்வு பொது மக்களை மேலும் சுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் மளிகை பொருட்களின் தேவையை வடமாநிலங்கள் தான் 70 சதவீதம் பூர்த்தி செய்வதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக மளிகை பொருட்களின் சப்ளை 95 சதவீதம் குறைந்துள்ளதாகவும் ஊரடங்கு உத்தரவு அமலான 12 நாட்களில் மளிகைப் பொருட்களில் 75% பொருட்கள் விற்று தீர்ந்து விட்டது என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். மக்கள் அனைவரும் தற்போது வீடுகளில் முடங்கி உள்ளதால் காய்கறி மளிகை பொருட்களின் செலவும் வழக்கத்தைவிட 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது அரவை ஆலைகள், தொழில் நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்களிடம் 15 நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் இருப்பில் உள்ளன. இந்த பொருட்களை தற்போது வெளியே கொண்டுவர முடியவில்லை என்று வியாபாரிகள் கூறுகிறார்கள் ஏனெனில் கொரோனா வைரஸ் பீதியால் உணவு பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரைவர்கள் பணிக்கு வர தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இதேபோல் பொருட்களை ஏற்றி இறக்கும் கூலி தொழிலாளர்களும் சரிவர வேலைக்கு வருவதில்லை. இதுபோன்ற காரணங்களால் மளிகை கடைகளுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்ய முடியவில்லை என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். மேலும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே செயல்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது . இந்த நேரத்தில் வியாபாரிகள் கடைகளில் இருப்பதால் மளிகை பொருட்களை எடுத்து வர முடியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே மளிகை பொருட்கள் வரத்து குறைந்து கொண்டே வந்தால் விலை அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது.

கொரானா வைரஸ் பீதி காரணமாக மளிகை பொருட்கள் வரத்து இல்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர் மளிகை பொருட்கள் வரத்து 95% குறைந்துவிட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய உணவுப்பொருட்கள் வரத்து குறைந்துள்ளது. தற்போதைய சூழலில் ஒரு சில பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த பொருட்களின் விலையும் கடுமையாக ஏறி உள்ளது. இந்த விலை உயர்வு பொது மக்களை மேலும் சுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் மளிகை பொருட்களின் தேவையை வடமாநிலங்கள் தான் 70 சதவீதம் பூர்த்தி செய்வதாக வியாபாரிகள் கூறுகிறார்கள். ஆனால் ஊரடங்கு உத்தரவு காரணமாக மளிகை பொருட்களின் சப்ளை 95 சதவீதம் குறைந்துள்ளதாகவும் ஊரடங்கு உத்தரவு அமலான 12 நாட்களில் மளிகைப் பொருட்களில் 75% பொருட்கள் விற்று தீர்ந்து விட்டது என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். மக்கள் அனைவரும் தற்போது வீடுகளில் முடங்கி உள்ளதால் காய்கறி மளிகை பொருட்களின் செலவும் வழக்கத்தைவிட 20 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது அரவை ஆலைகள், தொழில் நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்களிடம் 15 நாட்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் இருப்பில் உள்ளன. இந்த பொருட்களை தற்போது வெளியே கொண்டுவர முடியவில்லை என்று வியாபாரிகள் கூறுகிறார்கள் ஏனெனில் கொரோனா வைரஸ் பீதியால் உணவு பொருட்களை ஏற்றிச் செல்லும் டிரைவர்கள் பணிக்கு வர தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இதேபோல் பொருட்களை ஏற்றி இறக்கும் கூலி தொழிலாளர்களும் சரிவர வேலைக்கு வருவதில்லை. இதுபோன்ற காரணங்களால் மளிகை கடைகளுக்கு உணவு பொருட்கள் சப்ளை செய்ய முடியவில்லை என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். மேலும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மட்டுமே செயல்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது . இந்த நேரத்தில் வியாபாரிகள் கடைகளில் இருப்பதால் மளிகை பொருட்களை எடுத்து வர முடியவில்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே மளிகை பொருட்கள் வரத்து குறைந்து கொண்டே வந்தால் விலை அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது

Find out more: