கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முதலாக ஓசூரில் தனியார் நிறுவன ஊழியருக்கு நேற்று(சனிக்கிழமை) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இன்று (ஞாயிறு) சென்னையில் மீண்டும் நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தது. இதையடுத்து மீண்டும் கொரோனா இல்லாத மாவட்டம் ஆக கிருஷ்ணகிரி மாறி உள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கர்நாடக மாநிலம் மைசூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ஊழியர்கள் அனைவரையும் அந்த நிறுவனம் வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தி இருந்தது.
இதன்படி ஓசூரில் உள்ள தனது வீட்டில் தனியார் நிறுவன ஊழியர் தனிமைப்படுத்திக் கொண்டார். 34 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. முதல் கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டமாக கிருஷ்ணகிரி மாறியது. 34 நாட்களுக்கு பிறகு கொரோனா வந்தது மருத்துவ அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்தது. இதற்கிடையே அவருக்கு 2-வது, 3-வது கட்ட பரிசோதனைகள் செய்யப்படும் என்று நேற்று இரவு அதிகாரிகள் கூறியிருந்தனர். இதன்படி ஓசூர் தனியார் நிறுவன ஊழியருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு அந்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது ரத்த மாதிரிகள் இன்று ஆய்வு செய்யப்பட்ட நிலையில் நெகட்டிவ் என வந்துள்ளது. அவரது குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்த தகவலை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.