உலகின் 50 நாடுகளில் வசிக்கும் 6,300 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 40 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவின் கொடூரத் தாக்கம் ஒவ்வொரு நாடுகளையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் கொரோனாவின் பிடியில் சிக்கி இருக்கின்றனர். உலகின் மொத்தம் 50 நாடுகளில் 6,300 இந்தியர்கள் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் குவைத் வாழ் இந்தியர்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது சிங்கப்பூரில் இந்தியர்கள் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிங்கப்பூரில் நேற்று கூட 931 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 15 பேர் மட்டும்தான் சிங்கப்பூர்வாசிகள். எஞ்சியவர்கள் அனைவரும் வெளிநாட்டவர். சிங்கப்பூரில் பணிக்காக வந்த இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்தான். சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 50% பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 40 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதிப்பு மிக அதிகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.உலகின் 50 நாடுகளில் வசிக்கும் 6,300 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 40 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவின் கொடூரத் தாக்கம் ஒவ்வொரு நாடுகளையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் கொரோனாவின் பிடியில் சிக்கி இருக்கின்றனர். உலகின் மொத்தம் 50 நாடுகளில் 6,300 இந்தியர்கள் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் குவைத் வாழ் இந்தியர்கள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது சிங்கப்பூரில் இந்தியர்கள் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிங்கப்பூரில் நேற்று கூட 931 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் 15 பேர் மட்டும்தான் சிங்கப்பூர்வாசிகள். எஞ்சியவர்கள் அனைவரும் வெளிநாட்டவர். சிங்கப்பூரில் பணிக்காக வந்த இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்தான். சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 50% பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்தியர்கள் எண்ணிக்கை 40 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களில்தான் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதிப்பு மிக அதிகமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.