சமீப நாட்களாக சென்னையில் கொரோனா பாதிக்கப்படும் நபர்களில் பலருக்கு எப்படி கொரோனா தாக்குதல் ஏற்படுகிறது என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் இப்போதைக்கு குறைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. தினமும் பலர் தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் கொரோனாவிலிருந்து 94 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மேலும் 66 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நேற்று தமிழகத்தில் கொரோனாவால் 66 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் மொத்தம் 19 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. பெரம்பலூரில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேருக்கும் எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. அதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருது நகரில் நேற்று தலா ஒருவருக்கு கொரோனா வந்தது.அதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் விருது நகரில் நேற்று தலா ஒருவருக்கு கொரோனா வந்தது.

 

இந்த மூன்று பேருக்கும் எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. சென்னையில் நேற்று வந்தது மொத்தம் 43 கேஸ்கள். இதில் மொத்தம் 13 கேஸ்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் 10 கேஸ்கள் தொடர்பு மூலம் வந்து இருக்கலாம் என்று கூறுகிறார்கள். 3 பேருக்கு நேரடியாக கொரோனா வந்திருக்க வாய்ப்புள்ளது என்று அஞ்சுகிறார்கள். இதுதான் கடந்த சில வாரமாக சென்னையில் நிலை.

 

தமிழகத்தில் சென்னையில்தான் இப்படி அதிகமாக காண்டாக்ட் லெஸ் கேஸ்கள் அதிகம் வருகிறது. பொதுவாக ஒருவருக்கு கொரோனா வந்தால் அவருக்கு யார் மூலம் கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் இப்படி யார் மூலம் கொரோனா வந்தது என்று கண்டுபிடித்தால் மட்டும்தான் கொரோனா பாதிக்கப்பட்ட எல்லோரையும் தனிமைப்படுத்த முடியும்.

Find out more: