கொரோனாவினால் உலகமே ஸ்தம்பித்துபோயுள்ள நிலையில், அதனால் அதிகம் பாதிக்கப்பட்டது வல்லரசான அமெரிக்கா தான். பாதிப்பு எண்ணிக்கையும் சரி, பலி எண்ணிக்கையும் சரி மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிகம் தான். அதே நேரம் பொருளாதார ரீதியாகவும் மிக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த நாட்டில் ஏற்கனவே வரலாறு காணாத அளவு வேலையின்மை அதிகரித்து வருவதை, நாம் அன்றாடம் செய்திகள் மூலம் காண முடிகிறது. உலகின் வல்லரசுக்கே இந்த நிலை என்றால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் பெரும் அடியை காணலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்கா நிறுவனங்கள் பெரும் செலவினைக் குறைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கொரோனாவினால் உலகமே ஸ்தம்பித்துபோயுள்ள நிலையில், அதனால் அதிகம் பாதிக்கப்பட்டது வல்லரசான அமெரிக்கா தான். பாதிப்பு எண்ணிக்கையும் சரி, பலி எண்ணிக்கையும் சரி மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிகம் தான். அதே நேரம் பொருளாதார ரீதியாகவும் மிக பின்னடைவை சந்தித்து வருகிறது. அந்த நாட்டில் ஏற்கனவே வரலாறு காணாத அளவு வேலையின்மை அதிகரித்து வருவதை, நாம் அன்றாடம் செய்திகள் மூலம் காண முடிகிறது. உலகின் வல்லரசுக்கே இந்த நிலை என்றால், இந்தியா போன்ற வளரும் நாடுகள் பெரும் அடியை காணலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்கா நிறுவனங்கள் பெரும் செலவினைக் குறைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அவர்கள் எடுக்கும் முதல் நடவடிக்கையே பணி நீக்கம் தான். மேலும் பல நிறுவனங்கள் நீண்ட கால விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை நிலவி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் இதனால் போக்குவரத்து, சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட துறைகள் பெருத்த அடி வாங்கியுள்ளன.
இதற்கிடையில் மறுபுறம், ட்ரிப் அட்வைசர் நிறுவனம் தனது 25 சதவீத ஊழியர்களை பணி நீன்ன செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கொரோனாவால் அதன் மொத்த வருவாயும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஊழியர்களில் கால் பகுதியை நீக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து கடந்த செவ்வாய்கிழமையன்று அதன் வலைதளத்தில் ஊழியர்களின் பணி நீக்கம் குறித்து அறிவித்துள்ளது. இது சுமார் 900க்கும் மேற்பட்ட ஊழியர்களை பாதிக்கிறது. அவர்களில் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் கனடாவை தளமாகக் கொண்டவர்கள் என்றும் கூறப்படுகிறது. இதில் இந்தியர்கள் இல்லை என்பது தான் நல்ல விஷயமே.