நலம் தரும் நாட்டு மருத்துவத்தில்,  கறிவேப்பிலை கொண்டு தலைவலியை போக்கலாம். உணவு முறை மாற்றத்தால் தலைவலி பிரச்சனை ஏற்படுகிறது. ஒற்றை தலைவலியாக இருந்தால் அது மிகவும் வேதனையை கொடுக்கிறது. இதனால் மயக்கம், வாந்தி போன்றவை ஏற்படும். முறையாக சாப்பிட்டு வந்தால் தலைவலி வராது. போதிய அளவு தூங்க வேண்டும். 


செரிமானம் ஆகாத பொருட்களை சாப்பிடக்கூடாது. குறிப்பாக, இரவு நேரத்தில் கீரை, தயிர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். கறிவேப்பிலையை பயன்படுத்தி தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை, பேரிச்சம் பழம், தேன். 


கறிவேப்பிலையை நன்றாக அரைத்து கொள்ளவும். இந்த பசையை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில், 2 பேரிச்சம் பழத்தை துண்டுகளாக்கி போடவும். ஒரு டம்பளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி சிறிது தேன் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர தலைவலி குணமாகும். கறிவேப்பிலையில் மிகுதியான இரும்பு சத்து உள்ளது. உடலுக்கு ஊட்டச்சத்தாக விளங்குகிறது.


Find out more: